கிளிநொச்சியில் தாயும் - மகனும் கைது!
கிளிநொச்சி, பனங்கண்டி பகுதியில் குடு போதைப்பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனங்கண்டி-கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள சந்தேகநபர்களின் வீட்டு சூழலை பொலிஸார் சோதனை செய்த போது கைவிடப்பட்ட டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் நாளை(04.06.2025) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam