கிளிநொச்சியில் 3 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் 3 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருத நகர்பகுதியில் இன்று (03-06-2025) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது
அதிகாலையில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது.

இராணுவ புலனாயத் துறையினர் பொலிஸாருக்கு அறிவித்தற்கமைய கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு உடனே சென்றுள்ளனர்.
இதன் போது மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்
மேலதிக தகவல்:தேவந்தன்
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri