தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்ய அல்லது முறைப்பாடளிக்க எந்தவொரு நபருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2025.05.06 அன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களால் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகள்
இந்தத் தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டு 3 ஆம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 7 ஆம் திகதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும்.
எந்தவொரு நபரும் அலுவலக நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை அவற்றின் நகல்களைப் பரிசோதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan