விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த தாய், மகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை வங்கியின் பெரகம கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய 30 வயதான உமேஷிகா மதுமி மற்றும் 56 வயதான அவரின் தாய் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வாகன விபத்து
இவர்கள் அம்பலாந்தோட்டை பெரகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மகள் கொழும்பில் இருந்து இலங்கை வங்கியின் நலன்புரி வேனில் தனது தாயை வைத்தியரிடம் அழைத்து சென்று பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
