அனேகமான கடற்தொழிலாளர்களுக்கு நீச்சல் தெரியாது! இலங்கை உயிர்காப்பு ஒன்றியம்
இலங்கையில் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் கடற்தொழிலாளர்களில் 90 வீதமான கடற்தொழிலாளர்களுக்கு நீச்சல் தெரியாது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை உயிர்காப்பு ஒன்றியம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நீந்தத் தெரியாத மீனவர்கள்
அனேகமான கடற்தொழிலாளர்கள் தங்களால் நீந்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனியும், அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் பலருக்கு நீந்தத் தெரியாது கண்டறியப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தினால் இந்த இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.
நீச்சல்
கடலில் நீந்துபவர் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு வெறும் நீச்சல் மட்டும் தெரிந்திருப்பது போதுமானதல்ல என தெரிவிக்கப்படுகிறது.
கடற்தொழிலாளர்கள் அல்லது மீண்டும் நீந்தும் நபர் குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரத்தை தொடர்ச்சியாக 10 நிமிடங்களில் நீந்தி கடக்க கூடிய ஆற்றல் கொண்டிருக்க இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் 200 மீட்டர் தூரத்தை ஆறு நிமிடங்களில் நீந்தி கடக்க கூடிய ஆற்றல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |