இஸ்ரேலை தாக்கிய தமிழ் இளைஞர்கள்...தேடிச் சென்று பழிதீர்த்த மொசாட்
இலங்கையின் அறுகம்குடாவிற்கு உல்லாச பயணிகளாக வருகின்ற இஸ்ரேலியர்கள், மொசாட் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சில முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் பிரதேச சபைகளில் மத்தியிலும் மொசாட்டின் இலங்கை வருகைக்கு எதிரான தீர்மானங்களையும் எடுத்து வருகின்றனர்.
மொசாட்டின் இந்த இரகசிய நடவடிக்கை தொடர்பிலான பல்வேறு கண்டனங்களும் எதிர்ப்புக்களும் முஸ்லிம் தலைமைகளால் எழுப்பப்பட்டு வருகின்றன.
உண்மையிலேயே மொசாட் உறுப்பினர்கள் இரகசியமாக இலங்கைக்குள் நுழைய வேண்டிய அவசியம் இருக்கின்றதா?
45 வருடங்களுக்கு முன்னதாகவே இலங்கைக்குள் நுழைந்த மொசாட் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் - தமிழர்களுக்கு இடையில் நடந்த பல்வேறு முக்கிய தருணங்கள் தொடர்பில் அறிய வேண்டியிருக்கின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



