மல்லாவி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறை பாதை பிரச்சினை: மக்கள் கடும் அவதி
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களுக்குரிய மல்லாவி ஆதார மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை புனரமைப்பு செய்யப்படாமையினால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மல்லாவி ஆதார வைத்தியசாலை, பல பகுதிகளுக்கு சேவையாற்றும் ஒரு இடைநிலை ஆதார வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலைக்கு செல்லும் பாதை, டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அவல நிலை
உயிரிழப்புகள் ஏற்படும் போது மல்லாவி வைத்திய சாலையிலேயே உடலம் வைக்கப்படுவது வழமை. இந்த நிலையில், நீண்ட ஆண்டுகாலமாக வைத்தியசாலையில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் உடலங்களை தள்ளுவண்டிகள் மூலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லும் போது சீரற்ற பாதையினால் அரச பணியாளர்கள் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள குறித்த பிரேத அறை உள்ள வீதியினை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது நோயாளார் நலன்புரி சங்கமோ புனரமைப்பு செய்வதில் அக்கறை காட்ட வேண்டும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri