பொய் உரைப்பதை முதலில் தடை செய்ய வேண்டும்..! நாடாளுமன்றில் அர்ச்சுனா
நாடாளுமன்றத்தில் பொய் உரைப்பதை முதலில் தடை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(23.01.2026) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் இடமாற்றம்
27/2 பிரிவின் கீழ் நான் நேற்றையதினம் கேள்வி கேட்ட போது சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அக்கரைப்பற்று வைத்தியவாலையில் இருக்கும் வைத்தியரை இடமாற்றம் செய்ய மாட்டேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அன்றைய தினமே குறித்த வைத்தியசாலையின் வைத்தியரை இடமாற்றம் செய்திருக்கிறார்.
ஆகவே இது தொடர்பில் நான் நீதியை கோரிகின்றேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு எதிராக பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடன், வைத்தியர்களின் வேலை நிறுத்தமும் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan