சாமர சம்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விபரங்கள் இன்று (23.01.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள்
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு நடவடிக்கைகள் இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்றத்திலிருந்து அழைப்பாணை விடுக்கப்படும்போது, அங்கு முன்னிலையாகுமாறு சந்தேகநபரான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan