செம்பியன்பற்று பகுதியில் வெடிக்காத மோட்டார் வகைக்குண்டு மீட்பு!
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் வகைக்குண்டு இன்றையதினம் (7.2.2026) இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற போது வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்றினை அவதானித்து உள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கை
உடனடியாக அந்த நபர்கள் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்த போது சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக மருதங்கேணி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam