யாழ். தென்மராட்சியில் சில பகுதிகள் முடக்கம் - செய்திகளின் தொகுப்பு
யாழ். தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்படவுள்ளது.
அதிகளவு கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,