விடுதலைப் புலிகளின் தலைவர் கோராத வரி! முன்னாள் பிரதமர் - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்தின் தேர்தல் உறுதி மொழியும் கோசங்களும் ஒரே நாடு ஒரே சட்டம் என்றே காணப்பட்டது, ஆனால் துறைமுக நகருக்கென தனிச் சட்டத்தை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகின்றதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
உத்தேச ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் பார்க்கையில் இரு சட்டக் கொள்கையே இலங்கையில் ஏற்படப்போகின்றது. துறைமுக நகர் நிர்வாக கட்டமைப்பை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்துள்ள உத்தேச சட்ட மூலத்தின் பிரகாரம் ஒரே நாடு இரு சட்டங்கள் என்ற நிலைமையே ஏற்படவுள்ளது.
அதன் அடிப்படையிலேயே நோக்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்காது நிறைவேற்று அதிகாரம் சட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறிப்பாக வரி அறவீட்டு அதிகாரங்கள் போன்றவைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட கோரியிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
