அங்கவீனர்களுக்கும் கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்க உத்தேசம்
அங்கவீனமுற்ற மாணவர்களுக்கும் கூடுதலான பல்கலைக்கழக வாய்ப்புகளை வழங்குவதற்கான செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் உத்தேச செயற்பாடு தொடர்பான வழிகாட்டல் ஒன்றும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
அதன்பின்னர் அங்கவீனமுற்ற மாணவர்களுக்கான பொருத்தமான பாடநெறிகள், அவர்களுக்கு கற்பதற்கான போதுமான வசதிகளை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொடுப்பது இதன்நோக்கமாகும்.
அத்துடன் தேசிய மட்ட வெற்றிகளைப்பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகளை அளிப்பது தொடர்பிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
அதே போன்று பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் வெளிவாரி பட்டங்கள் தொடர்பான கற்கை நெறிகளை ஒழங்கமைக்கவும், குறித்த பட்டப்படிப்புகளின் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளது.



