எரிவாயு தட்டுப்பாடு! - மூடப்படும் உணவகங்கள்
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதத்திற்கும் அதிகமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மரக்கறி விலை அதிகரிப்புக்கு மேலதிகமாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு பிரதான பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தங்கள் சேவைகளை தொடர முடியாத நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக மரக்கறி மதிய உணவு பார்சல் ஒன்றின் விலை 180 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
you may like this Video