இலங்கையின் பாடசாலை கல்வி பெறாதவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!
இலங்கையில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாடசாலைக் கல்வியைப் பெறவில்லை என 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்த சனத்தொகையில் 400,511 பேர் பாடசாலைக்குச் செல்லாதவர்கள் ஆவர்.
இவர்களில் 136,168 பேர் ஆண்கள் மற்றும் 264,343 பேர் பெண்கள் ஆவர். 2024 ஆம் ஆண்டில் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மொத்த சனத்தொகை 13,871,317 ஆகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கோட்டாபய கிடப்பில் போட்ட சுரேஷ் சலேவுக்கு எதிரான முறைப்பாடுகள் : ஐந்து வருடங்களின் பின்னர் விசாரணைக்கு
கல்வி மட்டத்திலான மக்கள் தொகை
இந்தக் கணக்கெடுப்பின்போது 1,738,942 பேர் ஆரம்பக கல்வி பெற்றிருப்பதோடு 1,738,942 பேர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு அறிக்கையின்படி இடைநிலைக் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,096,402 ஆகவும் 1,655,756 பேர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருப்பதோடு 3,385,775 பேர் 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அறிக்கையின்படி 3,054,871 பேர் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு இணையான அல்லது அதற்கு சமமான கல்வியைப் பெற்றுள்ளனர்.
உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 3,635,462 ஆகும். மேலும் உயர்தரம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் மொத்த மக்கள் தொகை 2,677,022 ஆகும் என அறிக்கை கூறுகிறது.

2024 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி பட்டப்படிப்பு வரையிலான கல்வித் தகுதியுடைய மக்கள் தொகை 780,958 ஆகவும், முதுகலைப் பட்டம் வரையிலான கல்வித் தகுதியுடைய மொத்த மக்கள் தொகை 89இ598 ஆகவும் உள்ளது.
மேலும் முதுகலைப் பட்டம் வரையிலான கல்வித் தகுதியுடைய மக்கள் தொகை 76,127 ஆகவும், முனைவர் பட்டம் வரையிலான கல்வித் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 11,757 ஆக உள்ளது.
2024 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின்படி 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் பள்ளிக்குச் செல்லாதவர்களின் அதிகபட்ச சதவீதம் முறையே நுவரெலியா (8.3%) மட்டக்களப்பு (6.6%) மற்றும் பதுளை (6.0%) மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளது.
இருப்பினும் 2012 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த சதவீதம் குறைந்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 19 மணி நேரம் முன்
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan