புதுமாத்தளனில் அதிரடி சோதனை : 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்பு
முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட கூட்டுச் சோதனையின் போது, வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புதுமாத்தளன் பகுதியில் மீன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இடமொன்றை சோதனையிட்டபோதே இந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட மீன்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23