கடந்த ஆண்டில் 200 மேற்பட்ட சிறுவர்கள் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு
கடந்த ஆண்டில் 200ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது,
சமூக ஊடகங்களின் தாக்கம், இதில் அதிகமாக பிரதிபலிப்பதாக கல்லூரி குறிப்பிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் தவறான முடிவுகளால் மரணமடைந்துள்ளதாகவும், அதிகாரப்பூர்வமற்ற தரவுகள் வெளியாகியதோடு, 2023 இல் இது 270 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக பயன்பாடு
இந்த சம்பவங்களுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளதாக கல்லூரி விளக்கமளித்துள்ளது.
முக்கியமாக சமூக ஊடக பயன்பாடு, ஏதேனும் ஒரு வடிவத்தில் இதில் தொடர்புப்பட்டுள்ளதாகவும், இதன் விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் கபில ஜெயரத்ன கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டையும் கொண்டு வருகின்றன. இந்தநிலையில் அவற்றின் பயன்பாட்டை சிறுவர்கள் மத்தியில், சிறப்பாக ஒழுங்குபடுத்தவும் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் குறைக்கவும் பரிந்துரைகளை வெளியிடவுள்ளதாகவும் கபில ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |