கடுமையான பொது சுகாதார நெருக்கடியில் இலங்கை.. விடுக்கப்படும் எச்சரிக்கை
இலங்கை ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 150,000க்கும் மேற்பட்டவர்கள், பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த விடயத்தில் உடனடி தலையீடு இல்லாவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் நாட்டில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் கூர்மையாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று-எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எச்.ஐ.வி தொற்று
இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள், ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் மருந்துகளை செலுத்துபவர்கள், பீச் போய்ஸ் மற்றும் திருநங்கை பெண்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையில் தற்போது சுமார் 6,000 பேர் எச்ஐவி- எய்ட்ஸுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் மேல் மாகாணத்தில், காலி, கண்டி, குருநாகல், அனுராதபுரம், மாத்தறை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் இருந்தும் அதிக தொற்று விகிதங்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டில், 39,547 நபர்கள் எச்.ஐ.வி தொற்றுடன் உடன் வாழ்ந்து வந்தனர். இதில் 25,969 பேர் தங்கள் நிலையை அறிந்திருந்தனர். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 5,700 பேர் எச்.ஐ.வி உடன் வாழ்ந்து வந்தனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |