ஹஜ் யாத்திரையில் அதிகரிக்கும் மரணங்கள் : சவுதி அரசு வெளியிட்ட அறிவிப்பு
இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையில் வெயிலின் தாக்கத்தால் இதுவரை 1,301 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவர்களில் 83 சதவீதம் பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹஜ் செய்ய வந்தவர்கள் என்றும், போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியில் நீண்ட தூரம் நடந்துள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகவீனமடைந்த 95 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு, 22 நாடுகளில் இருந்து சுமார் 10 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரைக்கு வந்துள்ளனர்.
அதிக வெப்பநிலை
அதே நேரத்தில் சவுதி அரேபியாவின் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கலந்து கொண்டனர்.
அதிக வெயில் மற்றும் அனல் காற்று வீசியதால், பக்தர்கள் கடும் வெயிலால் அவதிப்பட்டதுடன் அவர்கள் அனைவரும் மூச்சு திணறி இறந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறப்புகள் பதிவான நாளில் அதிகபட்சமாக 125 டிகிரி வெப்பநிலை பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |