ஹமாஸ் உடனான அடுத்த நகர்வு தொடர்பில் நெதன்யாகு எச்சரிக்கை
காசாவில் ஹமாஸ் அமைப்புடனான போரின் தற்போதைய கட்டம் முடிவிற்கு வருவதாகவும் அடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தனது வடபகுதி எல்லைக்கு மேலும் படையினரை அனுப்பவுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரபாவில் தனது நடவடிக்கையை பூர்த்தி செய்யும் நிலையில் இஸ்ரேல் இராணுவம் உள்ளதாகவும் எனினும், அதன் அர்த்தம் காசா யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதல்ல எனவும் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பும்
எனினும், எதிர்காலத்தில் காசாவில் தற்போது நிலைகொண்டுள்ளதை விட குறைந்தளவு படையினரே தேவைப்படுவதாகவும் அங்கிருந்து படையினரை விலக்கி அவர்களை ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, வடபகுதி எல்லைக்கு எங்கள் படையினரை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் எனினும் தற்பாதுகாப்பே மிக முக்கியமானது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலும் மற்றொரு யுத்தத்தை நோக்கி நகர்கின்ற நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த கருத்துக்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |