பெக்கோ சமனின் வாக்குமூலத்தினால் சிக்கிய அதிகாரி
மொனராகலை - கொழும்பு வீதியில் தனக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்தை இயக்குவதற்காக ஊவா மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடமிருந்து மாதந்தோறும் மூன்றரை இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாக பெக்கோ சமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த அதிகாரி அடுத்த வாரம் குற்றப்பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.
கெஹல்பத்தர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமன், தற்போது குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
அதன்படி, அவருக்கு சொந்தமான 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இரண்டு சொகுசுப் பேருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வாக்குமூலம் பதிவு
ஊவா மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவர் ஒருவர் கொழும்பு-மொனராகலை வீதியில் இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றை இயக்க உரிமம் பெறுவதற்கு தன்னிடமிருந்து மாதாந்தம் ரூ.3.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்திற்கான உரிமம் கடந்த மார்ச் மாதம் காலாவதியாகிய நிலையில், அதிகாரியின் உதவியுடன் தொடர்ந்தும் இயக்கப்பட்டுள்ளது.

பெக்கோ சமன் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது மைத்துனர் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் செய்துள்ளதுடன், கடந்த மாதம் பணம் முன்னாள் தலைவரின் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பதவி விலகிய பிறகும் அவருக்கு பணம் வழங்கப்பட்டதாகவும், அவர் செய்த உதவிக்காகவே பணம் வழங்கப்பட்டதாகவும் பெக்கோ சமன் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் தலைவர் அடுத்த வாரம் குற்றப்பிரிவுக்கு வரவழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
படு மாஸாக விஜய் வீட்டில் நடக்கும் காவேரியின் வளைபாப்பு... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள வீடியோ இதோ Cineulagam