கொழும்பில் பிரபல உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு - மஹரகம நகரிலுள்ள பிரபல ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட கொத்து ரொட்டிக்குள் புழுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மஹரகம பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி பொதியை ஒரு மணிநேரம் காத்திருந்து வாங்கி உட்கொண்ட வாடிக்கையாளருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்ட நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.

வழக்கு பதிவு
இந்த உணவகத்தின் உரிமையாளர் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த உணவகம் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடத்தப்படுவதாக கூறி, பொது சுகாதார ஆய்வாளர்கள் வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri