மாணவர்களுக்கான பகல் உணவுக்கு மேலும் நிதி ஒதுக்கீடு!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவுக்காக மேலதிகமாக 4 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (04.10.2022) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
போஷாக்கு உணவு
இதற்கமைவாக பகலுணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கு மேலதிகமாக மேலும் 1 மில்லியன் மாணவர்களுக்கு முழுமையான போஷாக்கு நிறைந்த ஒருவேளை உணவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை மாணவர்களின் பகலுணவுக்கு தேவையான நிதியை வெளிநாட்டு நன்கொடை மூலம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்
அதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்து குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
