காசாவின் நூற்றுக்கணக்கான இலக்குகளை குறிவைத்த இஸ்ரேலிய படைகள்
காசாவின் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையின் மூலம் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை நேற்றையதினம் ஆரம்பித்திருந்தது.
200 பேர் பலி
இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதலை நகர்த்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த தாக்குதலில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கட்டார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தத்தின் கீழ் போரில் ஒரு இடைநிறுத்தத்தை புதுப்பிக்க பாலஸ்தீன குழுவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
