விடுதலைப்புலிகளின் தலைவரை பலமுறை சந்தித்தேன்! குடும்பத்தை ஒரு முறையும் சந்திக்கவில்லை (Video)
மாவீரர் தினத்தில், உலகத் தமிழர்களுக்கான ஆளுமைமிக்க ஒரு உரையை நாங்கள் கேட்பது வழமை. முழு உலகத் தமிழர்களும் அதற்காக காத்திருப்பர். ஆனால் இந்த வருடம் அந்த இடத்தில் மற்றுமொரு உரையை எப்படி அனுமதித்தோம் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை பலமுறை சந்தித்துள்ளதுடன்,அவரின் குடும்பத்தாருடன் எந்தவொரு அறிமுகமும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,விடுதலை போராட்டமே விடுதலைப்புலிகளின் தலைவரின் வாழ்க்கையாக காணப்பட்டது.
மாவீரர் நாள் என்பது மாவீரர்களை மாத்திரம் நினைவில் கொண்டு அவரக்ளுடைய பணியை உறுதியுடன் நாங்கள் முன்னெடுப்போம் என்ற உறுதி எடுக்கின்ற நாள். அது அவர்களுக்கான நாள். அதை தவிர்த்து ஏனைய சலசலப்புக்கள் அந்த நாளில் தவிர்க்கப்பட வேண்டியவை.
அவ்வாறான ஒரு சலசலப்பு இவ்வருடம் மாவீரர் தினத்தில் பதிவானது. அந்த சலசலப்பு ஒரு உரை மூலம் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
வழமையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் தினத்தில் உரையாற்றுவார். அந்த உரை அவருக்கு மாத்திரமானது. அவர் மட்டுமே அந்த உரையை ஆற்றுவார். உலகத் தமிழர்கள் அனைவரும் அந்த உரைக்காக காத்திருப்பர்.
வழமையாக விடுதலைப் புலிகளின் தலைவர் கூறும் ஒன்றுதான் சொல்லுக்கு முன்னால் செயல் இருக்க வேண்டும் என்பது. அந்த செயலை செய்து விட்டுத்தான் அவர் பேசவே ஆரம்பித்தார்.
அப்படி ஒரு உரையை கேட்ட நாங்கள், இன்று அதே இடத்தில் இன்னுமொரு உரையை எப்படி அனுமதித்தோம். அவர்கள் என்ன செயலை செய்துவிட்டு பேசுகிறார்கள் என்றும் நேரு குணரத்னம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு(Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |