ஒரு நாளில் 1,038 பேர் கைது : தேடப்பட்ட 84 பேரும் சிக்கினர்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் ஒரு நாளில் 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று (04.01.2024) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த எண்ணிக்கையிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 67 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள்
அத்துடன், போதைப்பொருட்களுக்கு அடிமையான 43 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 417 கிலோகிராம் ஹெரோயின், 24 ஆயிரத்து 203 கஞ்சா செடிகள் மற்றும் 722 போதை மாத்திரைகள் என்பவற்றுடன் பல்வேறு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வந்த 84 சந்தேகநபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |