கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தொடர அநுர அரசாங்கத்துக்கு மூடிஸ் அழைப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ்(Moody's) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என குறித்த நிறுவனம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் இலங்கையின் கடன் அவதான நிலைமை அதிகமாகவே இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார சவால்
இந்த பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமையளிக்கும் என சர்வதேச கடன்தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் கடன் சுயவிபரத்தை நீடித்து வலுப்படுத்துவதற்கு நிதி ஒருங்கிணைப்பு பங்களிக்கும் என்று மூடிஸ் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வட்டி செலுத்துதல்கள் சராசரியாக 40-50 சதவீத வருவாயுடன் அரசாங்கத்தின் கடன் வாங்கும் திறன் பலவீனமாக இருக்கும் என்று மூடிஸ் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.
2021இல் சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இலங்கையின் சீர்திருத்தப் பாதையில் அல்லது கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கவில்லை.
எனினும் சில மறுசீரமைப்புக்களின் பின்னர், முக்கியமாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே மாதம் நாடாளுமன்றத்தில் பொருளாதார மாற்று சட்டத்தை முன்வைத்ததில் இருந்து மூடிஸ் இலங்கையின் சீர்திருத்தப் பாதை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
