ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவு
அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பள முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை 2024 செப்டெம்பர் மாதம் முதல் இந்த விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள்
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் தொடர்பாக தனி குழு நியமிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் உள்ள சம்பள முரண்பாடுகளை ஒரேயடியாக தீர்க்க குழு நியமிக்கப்பட்டது.
இதற்கிடையில் அந்த குழுவின் ஆலோசனைப்படி, செப்டெம்பர் மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் எனவும், சுமார் 7 இலட்சம் பேர் இதனால் பலன் பெறுவார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam