வவுனியாவில் பருவகால மாற்றம் தொடர்பில் அவசர கலந்துரையாடல்
வவுனியா மாவட்டத்தில் மொன்சூன் பருவகால மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்த அவசர கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் இன்று (10.11.2023) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி. ஏ. சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பருவ காலநிலை மாற்றம்
இதன்போது, மாவட்டத்தின் தற்போதைய மொன்சூன் பருவ காலநிலை மாற்றம் காரணமாக வவுனியாவில் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்படும் வேளையில் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உயர் அதிகாரி, நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உயர் அதிகாரி, விவசாய திணைக்கள பணிப்பாளர், இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |