காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் இராணுவம் காசாவின் மிகப்பெரிய மருத்துமனையான அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதோடு 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அல்-ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா இதனை உறுதி செய்துள்ளார்.
குறித்த தாக்குதலுக்காக இஸ்ரேலின் டாங்கர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் போர் விமானம்
இது குறித்து இஸ்ரேல் தரப்பில் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் இஸ்ரேல், இந்த மருத்துவமனையை ஹமாஸ் படையினர் புகலிடமாகப் பயன்படுத்துவதாகவும் இங்கிருந்து அவர்கள் தாக்குதலைத் திட்டமிடுவதாகவும் கூறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கும் மருத்துவமனை தரப்பும் அமைச்சகமும் மறுப்பு தெரிவித்துள்ளது.
மருத்துமனையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எங்குமில்லை எனக் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியில் இந்த மருத்துவமனை அருகில் நின்றிருந்த அவசர ஊர்திகள் மீது இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
