கடைகளில் கொள்ளையடிக்கும் குரங்குகள் - கடும் நெருக்கடியில் மக்கள்
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் சுற்றித்திரியும் குரங்கு கூட்டம் காரணமாக கடைகளில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி மற்றும் மின் இணைப்புகள் மூலம் நகருக்குள் நுழையும் குரங்குகள், கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் உணவுப் பொருட்களை எடுத்து செல்வதாகவும், நகரை சுற்றியுள்ள பழ மரங்கள் மற்றும் சைப்ரஸ் மரங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நோட்டன்பிரிட்ஜ் பகுதி வீடுகளில் துணிகளை துவைத்து உலர்த்தும் ஆடைகளை குரங்குகள் எடுத்து செல்வதாகவும், தாம் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் நோர்டன்பிரிட்ஜ் மக்கள் கூறியுள்ளனர்.
கொள்ளையடிக்கும் குரங்குகள்
மேலும் மலை உச்சியில் இருந்து கடைகள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் பெறுவதாகவும் அவ்வப்போது குடிநீர் குழாய்களையும் குரங்குகள் உடைத்து விடுவதாகவும் நோர்டன்பிரிட்ஜ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிவனொலிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பமாகியுள்ளதாகவும், பக்தர்கள் நோர்டன்பிரிட்ஜில் ஓய்வெடுக்கவும், உணவு மற்றும் பானங்களை உண்பதற்காகவும் செல்வதாகவும் குரங்குகளால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.