குரங்கு காய்ச்சலை கண்டறியும் கருவிகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி துறை, குரங்கு காய்ச்சலைக் கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் கருவிகளை இந்தியாவில் இருந்து பெற்றுள்ளது.
எனினும் இதுவரை இலங்கையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை.
உலக சுகாதார அமைப்பு, கடந்த ஜூலை 23 ஆம் திகதியன்று குரங்கு காய்ச்சல் தொடர்பில் சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.
குரங்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை |
குரங்கு காய்ச்சல்
இதனையடுத்து அமெரிக்காவும் இந்த வாரம் குரங்கு காய்ச்சலை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே இலங்கையும் குரங்கு காய்ச்சலை கண்டறிவதற்கான கருவிகளை தருவித்துள்ளது என்று வைத்திய கலாநிதி ஜூட் ஜெயமஹா தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மற்றும் புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியன இரண்டு வகையான ஆர்டி- பிசீஆர் கருவிகளை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
