காலி முகத்திடலில் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தேரர் கைது
தேசிய பிக்கு முன்னணியின் தேரர் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வணக்கத்திற்குரிய கொஸ்வத்தே மகாநாம தேரர் முக்கிய பங்காற்றினார். கடந்த சில நாட்களாக காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல செயற்பாட்டாளர்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மூத்த தொழிற்சங்கவாதியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஜோசப் ஸ்டாலினும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 28ம் திகதி நடத்தப்பட்ட போராட்டம் ஒன்றின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
