திருகோணமலை விவசாய நிலங்களில் பிக்குவின் அடாவடி: ஜனாதிபதியிடம் கோரிக்கை
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள் நிலம் என பிக்கு ஒருவர் கூறி வருவதால் அப்பகுதி மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியிலாவது இதற்குரிய தீர்வை பெற்றுத்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை திரியாய்க் கிராமத்தின் பூர்வீக வயல் நிலங்களில் முக்கிய வயல் வெளிகளான வளத்தாமரை, ஆதிக்காடு, ஒட்டுப்புல்மோட்டை, நீராவிக்கண்டல் மற்றும் வேடன்குளம் என உள்ளடக்கிய வயல் வெளிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வயற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்குவின் அடாவடி
இந்நிலையில், புல்மோட்டை அரிசிமலைப் பிக்குவினால் அடாவடியாக கையகப்படுத்தப்பட்ட 88 ஏக்கர் பொதுமக்களின் உறுதிக் காணியில் விவசாயம் மேற்கொள்ள பாரிய சிரமத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பெரும்போக வயற்செய்கையின் போதும் இவ்விதமான நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்வதும் பின்னர் பிக்குவின் அடாவடியினால் பயந்து இருப்பதுமான அவல நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
நீதிமன்றினால் மக்களிடம் காணிகளை கையளிக்க கோரியும் பிக்கு அடாவடியான முறையில் இச் செயற்பாட்டை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எச்.ஏ. ரொஷான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
