108 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலம் சென்ற முக்கிய அறிவிப்பு
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட உள்ளமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவிற்கமைய, தற்போது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுதியில் சுமார் 120 வீடுகள் உள்ளதுடன், எஞ்சிய வீடுகளில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 7 மணி நேரம் முன்

மனைவியால் போதுமான துன்பம் அனுபவிக்கிறார்... அதை செய்வதில்லை: ஹரி தொடர்பில் மனம் மாறிய ட்ரம்ப் News Lankasri

Optical illusion: படத்தில் "Z" எழுத்துக்கள் நடுவே மறைந்திருக்கும் இலக்கத்தை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
