காய்ச்சல் அறிகுறிகள் உள்ள குழந்தைகள்: பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரத்பிரிவு, பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.
கை, கால் மற்றும் வாய் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் இந்நாட்களில் பதிவாகுவதாக குழந்தைகள் நல வைத்திய தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
எனவே முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிடுகின்றார்.
நோயின் அறிகுறிகள்
இந்த நோயின் அறிகுறிகளாக சுவாச பிரச்சினைகள், இருமல், சளி, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கில் அடைப்பு மற்றும் சில சமயங்களில் வாந்தி போன்றவை ஏற்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மருத்துவர்களின் உதவியை நாடுமாறும் அவர் கோரியுள்ளார்.
இன்ஃப்ளூயன்ஸா என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது குறிப்பாக மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலத்தில் பரவுகிறது.
இந்த நோய் பரவல் காரணமாக, குறிப்பாக இரண்டரை வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், நீண்ட கால சுவாச நோய்கள் உள்ளவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு காய்ச்சல் கடுமையாக இருக்கும்.
இந்த இன்ஃப்ளூயன்ஸா நிலைமை நீர்த்துளிகள் மூலம் பரவக்கூடும், எனவே அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை அணியுமாறு, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா, அறிவுறுத்தியுள்ள்ளார்.
குழந்தைகளின் வாய் ஆரோக்கியம்
இதேவேளை, ஐந்து வயது முதல் பன்னிரெண்டு வயது வரையிலான குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பிரிவின் பேராசிரியர் திலிப் டி சில்வா பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தில் முன்பள்ளி ஆசியரியர்கள் விசேட கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |