வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவோருக்கான அவசர அறிவிப்பு! நடைமுறைக்கு வரும் சட்டம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை அமைப்பாளர் அலுவலகத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட யுவதி, திருமணம் செய்யவிருந்த நிலையில், திருமணம் செய்யாமல் இருக்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யும் முன் பெண்ணை அச்சுறுத்தி வந்த சந்தேகநபர் - விசாரணையில் வெளியான தகவல் >>> மேலும் படிக்க
2. பண பரிமாற்று உண்டியல் முறைக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உண்டியல் முறைக்கு எதிராக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை >>> மேலும் படிக்க
3. தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து வகையான நிலையான தெலைபேசி மற்றும் அலைபேசிக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல் >>> மேலும் படிக்க
4. போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் என்ற போர்வையில் 80 பேர் நாட்டை விட்டு தப்பியோட்டம் >>> மேலும் படிக்க
5. மெமரி சிப்கள் கொண்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை நீக்கி, QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றியமைக்க தீர்மானம் >>> மேலும் படிக்க
6. பூஜ்ஜியம் என்ற நிலைமைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவினால், ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியும் என்றால், ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் எழுந்து நிற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணிலுக்கு மூன்று வாரங்களில் ஜனாதிபதியாக முடியும் என்றால் ஏன் எமக்கு முடியாது - மைத்திரி >>> மேலும் படிக்க
7. புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப்படிவம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கான அறிவிப்பு! வெளியானது விண்ணப்பப்படிவம் >>> மேலும் படிக்க
8. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியில் இணையவுள்ளதாக தெரியவருகிறது.
டலஸ் அணியில் இணையும் பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு அணி >>> மேலும் படிக்க
9. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று முதல் (03) நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் விசேட அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானி வெளியீடு >>> மேலும் படிக்க
10. இந்தியாவின் பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பதில் வெளியாகியுள்ளது.
அதன்படி, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சாமியார் நித்தியானந்தாவிடமிருந்து ரணிலுக்கு வந்த கடிதம்..! ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல் >>> மேலும் படிக்க