யாழில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Crime
By Theepan Apr 07, 2023 03:56 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் பலவேறு பண மோசடிகள் குறித்து அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதால் இது தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அச்சுவேலி வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாகத் தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய தையல் தைக்கும் பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (06.04.2302) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவித்துக் குறித்த பெண்ணிடம் அடுத்துவரும் மாதங்களில் அரசாங்கம் ஐயாயிரம் ரூபாய் சமுர்த்தி கொடுப்பனவைப் பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Money Scams In Jaffna

உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் 

எனவே அதற்காகத் தாம் ஒவ்வொரு சமுர்த்தி பயனாளிகளிடமிருந்தும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை அளவிடுகிறோம். என தெரிவித்து நான்கு படிவங்களைக் கொடுத்து அதில் கையொப்பமிட்டு வழங்குமாறு கூறி அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.

தன்னிடம் தற்போது அவ்வளவு தொகை பணம் இல்லை அயலியுள்ளவர்களிடம் பெற்றுத்தான் வழங்க வேண்டும் என வயதான பெண் தெரிவித்த போதிலும் பணம் உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாதங்களில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்து வலுக்கட்டாயமாகக் குறித்த பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பறி கொடுத்த பெண் தனிமையில் இருந்த நிலையிலே வந்திருப்பவர் முகக்கவசத்தினை அணிந்தவாறு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும் என்று கடுந்தொனியில் தெரிவித்ததால் தனக்கு இது மோசடி எனச் சந்தேகம் ஏற்பட்ட போதிலும் பணத்தை வழங்காவிட்டால் தனது உயிருக்கு ஏதேனும் விபரீதம் நிகழலாம் என்ற அச்சத்தினால் பணத்தை வழங்கியுள்ளார்.

யாழில் இடம்பெறும் பண மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Money Scams In Jaffna

பொலிஸ் விசாரணை

மேலும், தொலைபேசி ஊடாக அயலவர்களுக்குத் தெரிவிக்கலாம் என முயற்சித்த போது தனது சிமாட் கையடக்க தொலைபேசி ஒன்றும் அங்கிருந்து களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, கடந்த வாரம் நீர்வேலி பகுதியிலும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.

இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகத்திலிருந்து பதிவினை மேற்கொள்ள வருவதாகத் தெரிவித்துப் பல பண மோசடிகள் இடம் பெற்றுள்ளன.

எனவே இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களை மிக அவதானமாக இருக்குமாறு பிரதேச செயலர் மற்றும் கிராம சேவையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US