ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்த நபர்
ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி, அரச வேலை பெற்று தருவதாக கூறி, பண மோசடி செய்த ஒருவரை கொழும்பு திட்டமிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் திக்வெல்ல ஊருமக பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பணத்தை கொடுத்து ஏமாற்றமடைந்த நபர்களில் பிரதேச செயலாளர், சில ஆசிரியர்கள், பட்டதாரிகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துறைமுகம் அதிகார சபை, இலங்கை டெலிகொம், பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் தொழில் பெற்று தருவதாக கூறி சந்தேக நபர் 40 பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
பத்திரிகைகளில் வெளியாகும் திருமணம் தொடர்பான விளம்பரங்களில் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக்கொண்டு தனது சகோதரருக்கு திருமணம் செய்ய அவசியம் எனவும் மணப் பெண்ணுக்கு தொழில் இல்லை என்றால், தொழிலை பெற்று தர தனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை வைப்பு செய்யுமாறு கூறியும் சந்தேக நபர் பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.