சீன பசளை கப்பல் விவகாரத்தில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது : வனவாசி ராகுல தேரர்
நாட்டை கடந்த 73 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர் நாட்டின் கௌரவத்தை பூச்சியம் என்ற மட்டத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தேசிய நாமல் பூங்காவின் ஸ்தாபகர் வனவாசி ராகுல தேரர் (Wanawasi Rahula thero) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள வனவாசி தேரர், சீனாவில் இருந்து பசளை எனக் கூறி, குப்பையை ஏற்றி வந்துள்ள கப்பல், இலங்கையில் கடல் எல்லைக்குள் இருந்து கொண்டு சத்தமிடுகிறது.
பாருங்கள் நாம் எந்தளவுக்கு கோழைகளாக மாறியுள்ளோம். எமது நாட்டு மக்கள் கோழைகள் என சீனா எண்ணுகிறதா?.
இந்த கப்பலை ஏற்பதா அல்லது திருப்பி அனுப்புவதா என்பதை நாட்டின் ஆட்சியாளர்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த பசளை கப்பல் தொடர்பான விவகாரத்தின் பின்னணியில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கின்றது நான் நினைக்கின்றேன் எனவும் வனவாசி ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.