பாகிஸ்தானின் முக்கிய பந்துவீச்சாளர் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு
பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது 17 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவரின் பந்துவீச்சு, அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்திருந்தது.
மொகமது அமிர், பந்தை வேகமாக வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் வல்லவராக செயற்பட்டார்.
பல்வேறு சர்ச்சை
எனினும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஓராண்டு கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது 32 வயது ஆகும் நிலையில் அவர் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், கடந்த ஆண்டு 20க்கு 20 உலக கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக, தமது முடிவை திரும்பப்பெற்றார்.
எனினும் அதன் பின்னர், அவருக்கு பாகிஸ்தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |