சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமனம்
சிரியாவின் (Syria) இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர் (Mohamed al-Bashir) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அவர் அடுத்த வருடம் மார்ச் 01ஆம் திகதி வரை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர், முன்னதாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசாங்கத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஜனாதிபதியின் வெளியேற்றம்
கடந்த 08ஆம் திகதி சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த, பஷார் அல் அசாத் தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
அத்துடன், அவர் தற்போது ரஷ்யாவில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு மத்தியில் மொஹமட் அல் பஷீர் இடைக்கால பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
