திருக்குறளோடு ஆரம்பித்த மோடியின் உரை! இலங்கை மக்களுக்கான செய்தி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா - இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய நரேந்திர மோடி, திருவள்ளுவரின் குறள் ஒன்றை உதாரணம் காட்டி இலங்கை மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
முதல் வெளிநாட்டு விருந்தாளி
எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெற நல்ல நண்பனும், நல்ல நட்பையும் தவிர பாதுகாப்பு அரணாக வேறென்ன இருக்க முடியும் என்றும் அவர் வினவியுள்ளார்.
#WATCH | Colombo | Prime Minister Narendra Modi says, "Tamil saint Thiruvalluvar said - what could be bigger protection against the enemy if not the shield of a true friend and his friendship? President Anura Kumara Dissanayake had chosen India for his first foreign visit. Today,… pic.twitter.com/GoD3d1Bg3O
— ANI (@ANI) April 5, 2025
குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் இன்று, நான் அவரது முதல் வெளிநாட்டு விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ளேன். இது நமது சிறப்பு உறவின் ஆழத்தைக் காட்டுகிறது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
