ஜே.வி.பி கிளர்ச்சியின் நினைவு தினத்தில் இந்தியா உடன் ஒப்பந்தம் - விதியின் திருப்பம்
ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ளன.
இது ஒரு விதியின் திருப்புமுனை என ஜேவிபியில் இருந்து பிரிந்த முன்னணி சோசலிச கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
ஊடக மாநாடொன்றில் நேற்று(04.04.2025) கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம், எதிர்வரும் காலங்களில் இலங்கை தொடர்பில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புவிசார் அரசியல்
அத்துடன், மோடியின் விஜயத்தின் மூலம் பாதுகாப்பு ஒப்பந்தம், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இவற்றின் மூலம், இலங்கை துறைமுகங்கள், திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி பண்ணைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என மோடி எதிர்பார்ப்பதாக குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலைப் பொருத்தவரையில், இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்க மோதலில் ஈடுபட்டுள்ளன.
பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் இலங்கையும் தேவையில்லாமல் புவிசார் அரசியலில் ஈடுபட வேண்டியிருக்கும்.
வழிமாறிய அரசாங்கம்
எனவே, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது அரசாங்கத்தின் தவறு என குமார் குணரட்னம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அமெரிக்காவுடன் ACSA உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டதை அவர் நினைவுபடுத்தினார்.
மேலும், ராஜபக்சக்களும், விக்ரமசிங்கவும் நாட்டைக் காட்டிக் கொடுப்பது புதிதல்ல என கூறிய அவர், இந்த உடன்படிக்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய ஒரு அரசியல் அமைப்பு இன்று அவற்றிற்கு தலைசாய்க்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் சோசலிச ஆட்சி முறையை கடைப்பிடிப்பதாக உறுதியளித்து தற்போது தனியார்மயம் மற்றும் வரிவிதிப்பு என தமது வழிகளை மாற்றிக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 2 மணி நேரம் முன்

அய்யனார் துணை சீரியல் வீட்டிற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட், பல்லவன் செய்த வேலை.. சூப்பர் வீடியோ Cineulagam

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
