இலங்கையை வந்தடைந்த பின் மோடி வெளியிட்ட தகவல்
இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது அவரை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
இலங்கை விஜயம்
இந்நிலையில் இலங்கை விஜயம் தொடர்பில் மோடி தனது எக்ஸ் தள பதிவில் இலங்கை விஜயம் தொடர்பில் பின்வரும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன். pic.twitter.com/SkBJW05psQ
— Narendra Modi (@narendramodi) April 4, 2025
'“கொழும்புக்கு வருகைதந்துள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்ற அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இலங்கையில் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் குறித்து ஆவலுடன் உள்ளேன்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
