பெரும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கையில் கால்பதிக்கும் மோடி
இலங்கைக்கு வருகைத் தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) திருகோணமலை விஜயம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இரவு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்த நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து திட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் திருகோணமலை நகருக்கான விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர் திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் நிச்சயமாக திருகோணமலைக்குச் செல்வதற்கு ஆர்வமாக இருந்திருக்கின்றார். ஆனால் அந்த விஜயம் இலங்கையால் வேன்றுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,