பதவியேற்கும் மோடி: திரௌபதி முர்முவின் முறையான அழைப்பு
பாரதிய ஜனதா கூட்டணியின் தலைவர் நரேந்திர மோடி (Narendra Modi) மூன்றாவது முறையாக பிரதமராக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார்.
அவரின் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (07.06.2024) விடுத்துள்ளார்.
நரேந்திர மோடி, இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை இன்று இந்திய குடியரசுத்தலைவரான திரௌபதி முர்முவிடம் (Draupadi Murmu) கோரியுள்ளார்.
ஆட்சியமைக்கும் அழைப்பு
இதன்போது, அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான போதுமான உறுப்பினர்கள் தமது கூட்டணியில் இருப்பதாக தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் நரேந்திர மோடி குடியரசுத்தலைவரிம் சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்து, நரேந்திர மோடியிடம் முறையாக ஆட்சியமைக்கும் அழைப்பை திரௌபதி முர்மு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
