இலங்கையின் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க மோடி அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு
இலங்கையின் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க நரேந்திர மோடி அரசாங்கம் செவ்வாய்க்கிழமை மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இதனை இன்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை, இலங்கை நெருக்கடி குறித்து விளக்கமளிக்க மற்றொரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் இந்த மாநாட்டை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, இலங்கைக்கு வழங்கிய உதவிகள்
இதன்போது, இலங்கையின் நிலைமை மற்றும் கடந்த காலங்களில் இந்தியா, இலங்கைக்கு வழங்கிய உதவிகள் குறித்து வெளிவிவகார செயலாளர் உறுப்பினர்கள் முன்னிலையில் விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய, காங்கிரஸ் கட்சியும் அண்மையில் இலங்கை தொடர்பில் அனைத்து கட்சி, மாநாட்டை கூட்டுமாறு, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மீண்டும் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! போராட்டக்காரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை |