ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மீண்டும் வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு எதிர்வரும் இரண்டு நாட்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய,எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாகவும் அதன் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்க தீவிர நடவடிக்கை
இன்று முதல் அருகில் உள்ள நகரங்களில் போராட்டம் நடத்த வருமாறு மக்களை கேட்டுக் கொள்வதாகவும்,
நாடே போராட்டக் களமாக மாறியிருப்பதால் முன்னாள் ஜனாதிபதியும் பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.