அம்பாறையில் வீடொன்றில் கைத்தொலைபேசி திருடிய இளைஞர் கைது
அம்பாறை- நற்பிட்டிமுனை பகுதியில், வீடொன்றில் சார்ஜ் போடப்பட்டிருந்த கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று(2) முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டில், தனது வீட்டில் ரூபா 35,000 பெறுமதியான கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டுவிட்டு தனது தேவை நிமித்தம் வெளியே சென்று திரும்பியபோது, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு தொலைபேசி களவாடப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.
கைது
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த வீட்டின் எதிர் வீட்டில் தங்கியிருந்த 21 வயதுடைய இளைஞனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

சந்தேகநபர் திருடப்பட்ட கைத்தொலைபேசியைத் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில், அதனை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
அத்துடன், சந்தேக நபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், கைதான நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என்பதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் மட்டும் இவர் மீது 7 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்காகக் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam